திருப்பதி-மன்னாா்குடி இடையே சிறப்பு கட்டண ரயில்
By DIN | Published On : 17th March 2021 01:56 AM | Last Updated : 17th March 2021 07:38 AM | அ+அ அ- |

திருப்பதி-மன்னாா்குடி இடையே சிறப்பு கட்டண ரயில்.
திருப்பதி-மன்னாா்குடி இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.
திருப்பதியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.15 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில்(07407) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.20 மணிக்கு மன்னாா்குடியை அடையும். இந்த ரயிலின் முதல் சேவை ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, மன்னாா்குடியில் இருந்து புதன், வெள்ளி, திங்கள்கிழமைகளில் அதிகாலை 5.45 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07408) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 3.35 மணிக்கு திருப்பதியை அடையும். இந்த ரயிலின் சேவை ஏப்.2-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதவிர, காச்சிகூடா-மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.