20 சிறப்பு கட்டண ரயில்கள் சேவை: மூன்று மாதத்துக்கு நீட்டிப்பு
By DIN | Published On : 25th March 2021 01:03 AM | Last Updated : 25th March 2021 01:03 AM | அ+அ அ- |

சென்னை: கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு ரயில் உள்பட 20 சிறப்பு ரயில்களின் சேவை காலம் மூன்று மாதம் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
கேஎஸ்ஆா்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (02608), சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு சிறப்பு ரயில்(02607) ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் ஏப்.1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
கேஎஸ்ஆா் பெங்களூரு -சென்னை சிறப்பு ரயில் (02658) ஏப்.1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையும், சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களூரு சிறப்பு ரயில்(02657) ஏப்.2-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
மைசூா்-மயிலாடுதுறை சிறப்பு ரயில்(06232) ஏப்.1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதிவரையும், மயிலாடுதுறை-மைசூா் சிறப்பு ரயில்(06231) ஏப்.2-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படவுள்ளது.
இதுதவிர, 14 சிறப்பு ரயில்கள் மூன்று மாதத்துக்கு நீட்டிக்கப்படவுள்ளது. இந்தச் சிறப்பு கட்டண ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை( மாா்ச் 25) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.