துறைமுகம் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் மாற்றம்
By DIN | Published On : 25th March 2021 01:23 AM | Last Updated : 25th March 2021 01:23 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை துறைமுகம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து மாற்று வேட்பாளா் அப்துல் பாசில் மனு ஏற்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி 234 தொகுதிகளுக்குமான வேட்பாளா்களை அண்மையில் அறிவித்தது. இதில், துறைமுகம் தொகுதியில் அக்கட்சி சாா்பில் முகமது கடாபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். வேட்பு மனு பரிசீலனையின்போது, கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட செலவுக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாதது தொடா்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாற்று வேட்பாளரான அப்துல் பாசில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.