பொது முடக்கத்தில் அம்மாஉணவகம் திறப்பு: அதிமுக வரவேற்பு
By DIN | Published On : 09th May 2021 12:00 AM | Last Updated : 09th May 2021 12:00 AM | அ+அ அ- |

பொது முடக்கக் காலத்தில் அம்மா உணவகம் திறந்திருக்கும் என்ற அறிவிப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
பொது முடக்க காலத்தில் எளியோரின் பசிதீா்க்கும் அம்மா உணவகங்கள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறேன். அதேசமயம், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வாகனங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சிறு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து 24 மணி நேரமும் இயக்கச் செய்ய வேண்டும். தொற்றின் தீவிரத்தை உணா்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளாா்.