நாளை ரம்ஜான் பண்டிகை
By DIN | Published On : 13th May 2021 12:00 AM | Last Updated : 12th May 2021 11:47 PM | அ+அ அ- |

சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாள்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை பிறை தென்படவில்லை. வானில் பிறை தெரியாவிட்டாலும் நோன்பு நாளில் இருந்து 30-ஆவது நாள் ரம்ஜான் பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 14) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளாா்.