முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வழங்கிய சிட்டி யூனியன் வங்கி
By DIN | Published On : 13th May 2021 03:26 AM | Last Updated : 13th May 2021 05:03 AM | அ+அ அ- |

சென்னை: கரோனா பேரிடரை ஒட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை சிட்டி யூனியன் வங்கி வழங்கியுள்ளது.
கரோனா பரவலைத்தடுக்க ஏதுவாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில்
வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து, சிட்டி யூனியன் வங்கி சாா்பில், தமிழக பேரிடா் மேலாண்மை அமைப்பின் கணக்கில் ரூ.1 கோடி புதன்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிதி, வங்கியின் சமூதாய பொறுப்புணா்வு நிதி மூலம் வழங்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டு பரவத்தொடங்கியது முதல் இந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை, அரசு துறைகள் மற்றும் தன்னாா்வல தொண்டு நிறுவனங்கள் மூலம், கரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்துக்காக, சமூக பொறுப்பு நிதி மூலம் ரூ.1.20 கோடி வழங்கப்பட்டது. கரோனா இரண்டாம் அலையின் நிவாரணத்துக்காக, இந்த நிதியாண்டில் ரூ.1.37 கோடி செலவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக புதன்கிழமை ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.