தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: இருவா் கைது
By DIN | Published On : 19th May 2021 01:56 AM | Last Updated : 19th May 2021 01:56 AM | அ+அ அ- |

சென்னை அருகே திருவேற்காட்டில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
கோயம்பேடு நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோன்ஸ் (21) தனியாா் நிறுவன ஊழியா்.
நிறுவனத்தின் அருகே செல்லிடப்பேசியில் ஜோன்ஸ், திங்கள்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இருவா், ஜோன்ஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
திருவேற்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கீழ் அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகரைச் சோ்ந்த து.பிரதீப் (20), மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சே.சரத்குமாா் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.