சென்னையில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
By DIN | Published On : 26th November 2021 04:17 PM | Last Updated : 26th November 2021 04:51 PM | அ+அ அ- |

சென்னையில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நவம்பர் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
குமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.