

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு 2022-2023 ஆம் ஆண்டின் பட்ஜெட் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதமும் ஏப்ரல் 9-ம் தேதியே நடைபெற உள்ளது
பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு மேயராக பிரியாவும் துணை மேயராக மகேஷ்குமாரும் மற்றும் கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.