

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ தாண்டியது மற்றும் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.110.09-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ100.18-க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த 15 நாள்களில் 13ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் கடந்த 15 நாள்களில் பெட்ரோல் விலை ரூ.8.69, டீசல் விலை ரூ.8.75 அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.