நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலையில் ஆகஸ்ட் 3-ல் நடைதிறப்பு

சபரிமலையில் ஆகஸ்ட்  4 -ஆம் தேதி நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைதிறக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை:  சபரிமலையில் ஆகஸ்ட்  4 -ஆம் தேதி நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைதிறக்கப்படுகிறது.

தேவசம்போர்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல்போக சாகுபடியில் விளையும் நெற்கதிர்களை அறுவடை செய்து, அதை சபரிமலையில் வைத்து வழிபடுவது நிறைபுத்தரிசி பூஜை.

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை வரும் ஆகஸ்ட் 4  வியாழக்கிழமை, அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறுது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதன்கிழமை மாலை அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் ஊர்வலமாக  சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதிகாலை  கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அன்றைய தினம் சபரிமலையை பின்பற்றி நிறைபுத்தரிசி கொண்டாடப்படவுள்ளது.  கோயிலின் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி தலைமையில் பிரஹார சன்னதிகளின் சாந்திகள் நெற்கதிர்களை ஊர்வமாக கோயிலுக்கு கொண்டு வருவர். 

பின்னர் பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்களை பக்தர்களுக்கு வழங்கவுள்ளதாக கோயில் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com