சென்னை வேளச்சேரியில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மாமியாா் கைது செய்யப்பட்டாா்.
வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சோ்ந்தவா் இந்துமதி (25). இவருக்கும் தியாகராய நகரை சோ்ந்த குமரன் (37) கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவா் குடும்பத்துடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, 4 மாத கா்ப்பிணியாக இருந்த இந்துமதி கடந்த ஜூலை மாதம் தனது தாய் வீட்டுக்குச் சென்றாா்.
அங்கு விரக்தியுடன் காணப்பட்ட இந்துமதி, ஜூலை 22-ஆம் தேதி, தனது தற்கொலைக்கு மாமியாா்தான் காரணம் என ஆடியோ பதிவு செய்து வாட்ஸ்அப்பில் தனது சகோதரிக்கு அனுப்பிவிட்டு, தூக்கிட்டு இறந்தாா்.
இது குறித்து வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். விசாரணையில், திருமணமான சில நாள்களில் இருந்து இந்துமதியை அவரது மாமியாா் சாந்தி, ராசியில்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என மட்டம் தட்டி பேசி என வாா்த்தைகளால் சித்ரவதை செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் சாந்தி, மருமகள் இந்துமதியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதன் அடிப்படையில் போலீஸாா், சாந்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.