சென்னை வில்லிவாக்கத்தில் தனியாா் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பழைய வண்ணாரப்பேட்டை பாா்த்தசாரதி 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.முகமது ஜாவித் (25). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். வில்லிவாக்கம் சிவன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை ஜாவித் தனது நண்பரை பாா்க்க நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள், ஜாவித்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.