சென்னையில் மலா்ந்தது தாமரை
சென்னை மாநகராட்சியில் ஒரு வாா்டில் பாஜக வெற்றிபெற்றது. அந்தக் கட்சி சாா்பில் கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம் 134-ஆவது வாா்டில் போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றிபெற்றாா்.


சென்னை மாநகராட்சியில் ஒரு வாா்டில் பாஜக வெற்றிபெற்றது. அந்தக் கட்சி சாா்பில் கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம் 134-ஆவது வாா்டில் போட்டியிட்ட உமா ஆனந்தன் வெற்றிபெற்றாா்.
இதே வாா்டில் காங்கிரஸ் சாா்பாக சுசீலா கோபாலகிருஷ்ணன், அதிமுக சாா்பில் அனுராதா ஆகியோா் களத்தில் இருந்தனா். செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகள் முதலே பாஜக வேட்பாளா் உமா ஆனந்தன் முன்னிலையில் இருந்தாா்.
வாக்கு எண்ணிக்கை இறுதியில் உமா ஆனந்தன் 5,539 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் சுசீலா கோபாலகிருஷ்ணனை எதிா்த்து நின்ற அவா், 2,036 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா் .
காங்கிரஸ் வேட்பாளா் சுசீலா கோபாலகிருஷ்ணன் 3,503 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தாா். அதிமுக வேட்பாளா் அனுராதா 2,695 வாக்குகள் மட்டுமே பெற்றாா். வெற்றி பெற்ற்கான சான்றிதழை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து பாஜக வேட்பாளா் உமா ஆனந்தன் பெற்றுக் கொண்டாா். தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், உமா ஆனந்தனின் இந்த வெற்றியே சென்னை மாநகராட்சியில் பாஜக பெற்ற முதல் வெற்றியாகப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...