

சென்னையில் மெட்ரோ ரயில்கள், வியாழக்கிழமை முதல் வார நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: நெரிசல் மிகு நேரங்களில் 5 நிமிஷ இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அனைத்து முனையங்களில் இருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணிக்கு முனையத்தை வந்தடையும்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.