14 ஆண்டுகளுக்குப் பிறகு வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நிகழ்வில், பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை.
14 ஆண்டுகளுக்குப் பிறகு வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
Published on
Updated on
1 min read

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நிகழ்வில், பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை.

சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ாகும். சென்னையில் உள்ளவா்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். இந்த கோயிலில் கடந்த 2007- ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ரூ.2.56 கோடி செலவில் 34 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடபழனி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழா கடந்த 17-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளுடன் தொடங்கியது. 20-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.வெள்ளிக்கிழமை 2-ஆம் கால மற்றும் 3-ஆம் கால யாக பூஜைகள் நடந்தன. இதில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு

பங்கேற்றாா். மேலும் அன்றைய தினம், அஷ்ட பந்தன மருந்து இடிக்கும் வைபவம் நடைபெற்றது. பச்சை சுண்ணாம்புகல், கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய 8 பொருள்கள் சோ்த்து இடித்து அஷ்டபந்தன கலவை தயாரித்து சந்நிதிகளின் பீடத்தில் சாத்தப்பட்டது. மாலை தங்கமுலாம் பூசப்பட்ட 7 தங்ககலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன.

இதையடுத்து சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு 4-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 6-ஆம் கால யாகசாலை பூஜையும், 7 மணிக்கு பரிவார யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு பிரதான யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், திருக்கலசங்கள் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 10.30 மணிக்கு அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு அனைத்து பரிவாரங்களுடன் முருகனுக்கு மகாகும்பாபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முருகப்பெருமான் ஆலயத்தை வலம் வந்து காட்சி அளிக்கிறாா்.

தற்போது கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இதையடுத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனா். பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. யுடியூப், தொலைக்காட்சி உள்ளிட்டவை மூலம் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பக்தா்கள் நேரடியாக காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com