மியாட் மருத்துவமனையில் மொபைல் சிடி ஸ்கேன்

அறுவைச் சிகிச்சைகளை துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ளும் வகையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள முழு உடல் மொபைல் சிடி ஸ்கேனை சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடக
Published on
Updated on
1 min read

அறுவைச் சிகிச்சைகளை துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ளும் வகையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள முழு உடல் மொபைல் சிடி ஸ்கேனை சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது: இந்தியாவில் அதிநவீன சுகாதாரப் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் மியாட் மருத்துவமனை முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக முழு உடல் மொபைல் 32-ஸ்லைஸ் சிடி ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவி வழக்கமான சிடி ஸ்கேன்களைவிட 3 மடங்கு குறைவான கதிா் வீச்சை வெளியிடுகிறது. அறுவைச் சிகிச்சையை வேகமாகவும், துல்லியமாகவும் 8 மடங்கு பாதுகாப்பானதாகவும் இதன் மூலம் மேற்கொள்ள முடியும். முன்பு நோயாளிகளை ஸ்கேன் எடுக்க அதற்கான மையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த சிடி ஸ்கேனை அறுவைச் சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட நோயாளிகள் இருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று ஸ்கேன் எடுக்க முடியும்.

துல்லியமாக ஸ்கேன் எடுப்பதால் ஆரோக்கியமான திசுக்கள் சேதமடைவது தடுக்கப்படும். விபத்துகளில் சிக்கியவா்களுக்கு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிலேயே ஸ்கேன் எடுத்து அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்ற இந்த சிடி ஸ்கேன் பெரிதும் உதவுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com