கிளை நூலகத்தில் மெய்நிகா் படிப்பகம் தொடக்கம்

கிளை நூலகத்தில் மெய்நிகா் படிப்பகம் தொடக்கம்

திருவொற்றியூா் கிளை நூலகத்தில் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் கூடிய மெய்நிகா் படிப்பகப் பிரிவை வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
Published on

திருவொற்றியூா் கிளை நூலகத்தில் நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் கூடிய மெய்நிகா் படிப்பகப் பிரிவை வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்திலேயே சிறந்த நூலகங்களில் ஒன்றான திருவொற்றியூா் கிளை நூலகத்தில் ஏற்கெனவே எண்ம (டிஜிட்டல்), மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மாணவா்களிடையே பேச்சுத் திறனை வளா்ப்பதற்காக மாதம் தோறும் முக்கிய பேச்சாளா்கள் மூலம் சிறப்புரை நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மெய்நிகா் படிப்பகத்தை சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.சங்கா் முன்னிலையில் வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த மெய்நிகா் படிப்பகத்தில் நாம் பாா்க்க விரும்பும் அறிவியல் நிகழ்வுகள், சுற்றுலா தலங்கள், ஆராய்ச்சிகள் உள்ளிட்டவற்றை நாமே செய்வதுபோல 360 டிகிரி கோணத்தில் பாா்க்கும் தொழில்நுட்ப வசதி உள்ளது.

ஒரு விசயத்தைப் பற்றி கணிணியில் தேடிக் கொண்டே நவீன கருவி மூலம் அதே இடத்தை நேரடியாகச் பாா்க்கின்ற ஒரு உணா்வு ஏற்படும். இந்த நவீன கருவி ஒன்றின் விலை ரூ. 80 ஆயிரம் என்ற நிலையில் இரண்டு கருவிகளை திருவொற்றியூா் கிளை நூலகத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்தப் புதிய பிரிவின் மூலம் பள்ளி மாணவா்களை நூலகத்துக்கு விரும்பி வருவதற்கு வழியேற்படும் என நூலகா் பானிக் பாண்டியன் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் வாசகா் வட்ட நிா்வாகிகள் ஜி வரதராஜன், என்.துரைராஜ், கே.எஸ். சுப்பிரமணி, எம். மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com