முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி போதைப்பொருளுடன் 3 பேர் கைது
By DIN | Published On : 06th April 2022 06:23 PM | Last Updated : 06th April 2022 06:23 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.9.86 கோடி மதிப்பிலான, 49.2 கிலோ எடையுள்ள சூடோபெட்ரின் என்ற போதைப்பொருளை கடத்தியதாக 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
தகவலின் அடிப்படையில் பரிசோதித்த சென்னை சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவினர், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் ஏற்றுமதி சரக்குகளில் இருந்து காகித பலகை பேக்கிங் பொருள்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 49.2 கிலோ எடையுள்ள சூடோபெட்ரின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.
3 பேரும் NDPS சட்டத்தின் பிரிவு 8 இன் விதிகளை மீறியதாகவும், NDPS சட்டத்தின் பிரிவு 21, பிரிவு 23 மற்றும் பிரிவு 29 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக சுங்கத்துறை அதிகாரி கூறினார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.