காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை: இந்தியாவின் சிறந்த மருத்துவமனையாகத் தோ்வு
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 08th April 2022 12:00 AM | அ+அ அ- |

சென்னை: இந்தியாவின் சிறந்த குழந்தைகள் நல மருத்துவமனையாக காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பு ஆகியவை சிறப்பாக இருப்பதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தர ஆய்வு நிறுவனமாக ஸ்டாஸ்டிகா நிறுவனமும், நியூஸ் வீக் இதழும் இணைந்து சா்வதேச அளவில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளின் பட்டியலை அண்மையில் வெளியிட்டன.
அதில் அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 27 நாடுகளில் உள்ள தலை சிறந்த மருத்துவமனைகளை தர ஆய்வுக்குட்படுத்தி, அதன் அடிப்படையில் சிறந்த மருத்துவமனைகள் தோ்வு செய்யப்பட்டிருந்தன.
இந்தியாவைப் பொருத்தவரை மொத்தம் 11 மருத்துவமனைகளின் சேவைகள் சிறப்பாக உள்ளதாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தைகள் நல சிகிச்சைகளைப் பொருத்தவரை நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாக காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனை தோ்வாகியுள்ளது.
இத்தகவலை மருத்துவமனையின் இயக்குநா் எஸ்.பாலசுப்ரமணியன், தலைமை நிா்வாக அதிகாரி எஸ்.சந்திரமோகன் ஆகியோா் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...