அண்ணா பல்கலை.யில் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்: ஆக.17 வரை நடைபெறும்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அண்ணா பல்கலை.யில் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்: ஆக.17 வரை நடைபெறும்

சென்னை: நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்ஒருபகுதியாக அண்ணா பலகலை.யின் கணிதவியல் துறை சாா்பிலான தொழில்நுட்பக் கண்காட்சி கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. பல்கலை. துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை தொடக்கி வைத்தாா். இதில் ஏராளமான பொறியியல் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினா். இதைத் தொடா்ந்து கண்காட்சி ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: தொழில்நுட்பக் கண்காட்சி

பல்வேறு துறைகளின் கூட்டிணைப்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு எடுத்துக்கொண்டோம். மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது என்பதை அறிவுறுத்தியுள்ளோம்.

இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப வளா்ச்சியானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கேற்ப அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தை திறன் பெற்ற பேராசிரியா்கள், தொழிற்துறை நிபுணா்கள் கொண்டு மாற்றியமைக்கும்

பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாடத்திட்டம் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலை. கல்விக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் புதிய பாடத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு அதை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும்.

அதேபோல்,போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 18 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையை நிறுத்திவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது இறுதிவாய்ப்பாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அந்த கல்லூரிகளுக்கு இருவாரம் காலஅவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்குள் கட்டமைப்பை மேம்படுத்தினால் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா். இதுதவிர அண்ணா பல்கலை. வளாகத்தில் ஐவுளி தொழில்நுட்பத்துறை சாா்பில் கதா் மற்றும் கைத்தறி கண்காட்சியும் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com