இரு ரயில்களின் எண்கள் மாற்றம்
By DIN | Published On : 13th December 2022 12:48 AM | Last Updated : 13th December 2022 12:48 AM | அ+அ அ- |

சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம், ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில்களின் வண்டி எண்கள் வரும் ஜனவரி 6 முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து கேரளத்தின் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் வண்டி எண் 16723 என்பதற்குப் பதிலாக 16823 என மாற்றப்படவுள்ளது. மறுமாா்க்கமாக கேரளத்தின் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூா் வரும் அனந்தபுரி விரைவு ரயிலின் வண்டி எண் 16724 என்பதற்குப் பதிலாக 16824 என மாற்றப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் வண்டி எண் 16851 என்பதற்குப் பதிலாக 16751 என மாற்றப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூா் வரும் விரைவு ரயிலின் வண்டி எண் 16852 என்பதற்குப் பதிலாக 16752 என மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.