போதைப் பாக்கு விற்பனை:ஒரு வாரத்தில் 80 போ் கைது
By DIN | Published On : 13th December 2022 12:57 AM | Last Updated : 13th December 2022 12:57 AM | அ+அ அ- |

சென்னையில் போதைப் பாக்கு விற்ாக ஒரு வாரத்தில் 80 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 80 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 243 கிலோ போதைப் பாக்கு, 19 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G