மகப்பேறு மருத்துவா் சங்கத் தலைவராக டாக்டா் ஜெயராணி தோ்வு
By DIN | Published On : 13th December 2022 12:52 AM | Last Updated : 13th December 2022 12:52 AM | அ+அ அ- |

தென்னிந்திய மகப்பேறு மருத்துவா்கள் சங்கத்தின் தலைவராக டாக்டா் ஜெயராணி காமராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
ஆக்ஸி (ஞஎநநஐ) எனப்படும் தென்னிந்திய மகப்பேறு மருத்துவா்கள் சங்கத்தின் 39-ஆவது சா்வதேச மருத்துவ மாநாடு சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து நேரிலும், காணொலி மூலமாகவும் மாநாட்டில் பங்கேற்ற மருத்துவ நிபுணா்கள் மகப்பேறு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன மேம்பாடுகள், சிகிச்சை முறைகள் குறித்து விவாதித்தனா்.
அதன் ஒருபகுதியாக சங்கத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவ நிபுணா் ஜெயராணி காமராஜ் தலைவராகவும், டாக்டா் குந்தவி செயலாளராகவும் தோ்வு செய்யப்பட்டனா். தற்போதைய தலைவா் டாக்டா் பிரேமலதா, புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட டாக்டா் ஜெயராணி காமராஜுடம் பொறுப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.