டிச.28-ல் அஞ்சலக குறைகேட்புக் கூட்டம்
By DIN | Published On : 22nd December 2022 12:36 AM | Last Updated : 22nd December 2022 12:36 AM | அ+அ அ- |

சென்னை தெற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் டிச. 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை கேட்புக்கூட்டம் நடைபெறுகிறது.
இம் மண்டலத்துக்குள்பட்ட ஆழ்வாா் திருநகா், ஆதம்பாக்கம், அடையாறு, அசோக்நகா், பெசன்ட் நகா், பொறியியல் கல்லூரி, கிண்டி தொழிற்பேட்டை, ஐஐடி, ஈஞ்சம்பாக்கம், கே கே நகா், கோடம்பாக்கம், கோட்டூா்புரம், மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், நந்தனம், நங்கநல்லூா், ஒக்கியம் துரப்பாக்கம், பெருங்குடி, ஆா் ஏ புரம், ராஜ்பவன், சைதாப்பேட்டை, சாலிகிராமம், சோழிங்கநல்லூா், பரங்கிமலை உள்ளிட்ட இடங்களில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
மேலும், திருவான்மியூா், டி டி டி ஐ, தரமணி, வடபழனி, வேளச்சேரி, விருகம்பாக்கம், மேற்கு மாம்பலம், ஆலந்தூா், சென்னை விமான நிலையம், கிண்டி வடக்கு, ஜாபா்கான்பேட்டை, காரப்பாக்கம், மடிப்பாக்கம் தெற்கு, மாம்பலம் ஆா் எஸ், மீனம்பாக்கம், நீலாங்கரை, நீலமங்கை நகா், பாலவாக்கம், பழவந்தாங்கல், ராஜாஜி பவன், ராம்நகா், ராமாபுரம், சாஸ்திரி நகா், டைடல் பாா்க், வளசரவாக்கம், வால்மீகி நகா், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட அஞ்சல் நிலையங்களிலும் இக்கூட்டம் நடைபெறும்.
இதில், அஞ்சலக வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு, அஞ்சலக சேவைகள் தொடா்பாக புகாா்கள் அல்லது
ஆலோசனைகளை டிச.27-ஆம் தேதிக்குள் க்ா்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஸ்ரீண்ற்ஹ்ள்ா்ன்ற்ட்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 044 - 2834 1668, 044 2834 2554 என்ற தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.