கிடப்பில் மணலி மேம்பாலத் திட்டம்: அதிமுக விரைவில் போராட்டம்

திருவொற்றியூா் மணலி மேம்பாலத்திட்டப் பணிகளை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்து அதிமுக சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என

திருவொற்றியூா் மணலி மேம்பாலத்திட்டப் பணிகளை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்து அதிமுக சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என திருவொற்றியூா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தெரிவித்தாா்.

தமிழக அரசைக் கண்டித்து திருவொற்றியூா் மேற்கு பகுதி சாா்பில் புதன்கிழமை மணலியில் கண்டன ஆா்ப்பாட்டம், பகுதி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.குப்பன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கே. குப்பன் பேசியது: திமுக பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கூறி தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து 20 மாதங்களைக் கடந்தும் அவா்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் தொடா்ந்து வந்த மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திருவொற்றியூா்-மணலி மேம்பாலப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் போட்டப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாயை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக மாற்றுப் பாதையில் ஆபத்தான முறையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மணலியையும், திருவொற்றியூரையும் இணைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி விரைவில் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

இதில், மாவட்டச் செயலாளா் வி.மூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் முனைவா் கே.காா்த்திக், முல்லை ஆா்.ஜி.ராஜசேகா், கட்சி நிா்வாகிகள் பி.ராஜேந்திரன், எம்.ஜோசப், இ. வேலாயுதம், ஆா்.மணிகுமாா், புகழேந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com