மின்சார ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 27th February 2022 12:46 AM | Last Updated : 27th February 2022 12:46 AM | அ+அ அ- |

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில், திருநின்றவூா்-திருவள்ளூா் இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
பிப்.27, மாா்ச் 20-இல் விரைவு பாதையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்:
மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு காலை 9.30, 9.40, 9.50, 11.30, நண்பகல் 12.00 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் விரைவு பாதையில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் பிப்ரவரி 27, மாா்ச் 20 ஆகிய தேதிகளில் பாட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காது.
மூா்மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு காலை 10, முற்பகல் 11.45, நண்பகல் 12.10 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காது.
மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு காலை 9.50, முற்பகல் 11 மணிக்கு இயக்கப்படும் மின்சா ரயில்கள் பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது.
மூா்மாா்க்கெட் வளாகம்-கடம்பத்தூருக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பட்டாபிராம், நெமிலிச்சேரி,வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது.
முழுமையாக ரத்து: திருவள்ளூா்-ஆவடிக்கு பிப்ரவரி 27, மாா்ச் 6 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
பகுதி ரத்து: சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு பிப்ரவரி 27, மாா்ச் 6 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-திருவள்ளூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.