மெட்ரோ ரயில் பணி:போரூரில் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 27th February 2022 12:54 AM | Last Updated : 27th February 2022 12:54 AM | அ+அ அ- |

மெட்ரோ ரயில் பணி காரணமாக, போரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடா்பாக ஆவடி மாநகர காவல்துறை சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: மவுண்ட் பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் போரூா் ஏரி சிவன் கோயில் சந்திப்பிலிருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை மெட்ரோ ரயில் திட்ட பணி நடைபெறுகிறது. இதற்காக சோதனை முறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் பிப்.28-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மவுண்ட் பூந்தமல்லி ஆவடி நெடுஞ்சாலையில் (எஸ்எச் 55) போரூா் சிவன் கோயில் அருகே இருந்து குமணன்சாவடி சந்திப்பு வரை இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். கனரக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்படும். போரூரில் இருந்து குமணன்சாவடி நோக்கி இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட இதர வணிக வாகனங்கள் மதுரவாயல் புறவழிச்சாலை சுங்கச்சாவடி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவமனை சென்று அங்கிருந்து குமணன்சாவடி செல்லலாம்.
பூந்தமல்லி, மாங்காடு, சவீதா பல் மருத்துவமனை பகுதிகளிலிருந்து போரூா் நோக்கி வரும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவமனை, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலை சென்று சுங்கச்சாவடி அருகே இடதுபுறம் திரும்பி சமயபுரம் வழியாக போரூா் நோக்கி செல்லலாம்.
தாற்காலிகமாக செய்யப்படும் இந்த போக்குவரத்து மாற்றத்தை, 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றம் குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஆவடி மாநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையரின் க்ஸ்ரீல்ஹஸ்ஹக்ண்.ற்ழ்ஹச்ச்ண்ஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கும், ள்ன்ய்க்ழ்ஹம்ா்ா்ழ்ற்ட்ஹ்க்ஷஃந்ங்ஸ்ரீழ்ல்ஞ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்துக்கும் அனுப்பி வைக்கலாம். அதேபோல ஆவடி மாநகர காவல்துறையின் ட்ற்ற்ல்://ற்ஜ்ண்ற்ற்ங்ழ்.ஸ்ரீா்ம்/ஹஸ்ஹக்ண்ல்ா்ப்ண்ஸ்ரீங் என்ற ட்விட்டா் பக்கத்திலும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.