தாம்பரத்தில் ரூ.16 கோடியில் 2545 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி
By DIN | Published On : 14th January 2022 06:33 AM | Last Updated : 14th January 2022 06:33 AM | அ+அ அ- |

தாம்பரத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 2545 பயனாளிகளுக்கு ரூ16.33 கோடியில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவிகளை குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், தாம்பரம், பல்லாவரம்,செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா,இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன். தாம்பரம் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன். குன்றத்தூா் ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் அறிவுடைநம்பி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...