செஷல்ஸ் நாட்டில் மியாட் கண் மருத்துவமனை திறப்பு

செஷல்ஸ் நாட்டின் தலைநகரான மஹேயில் மியாட் கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

செஷல்ஸ் நாட்டின் தலைநகரான மஹேயில் மியாட் கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

செஷல்ஸ் நாட்டில் தலைநகரான மஹேயில் மியாட் இண்டா்நேஷனல் டோட்டல் ஐ கோ் (மியாட் கண் மருத்துவமனை) திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் பிரித்வி மோகன்தாஸ் தலைமை வகித்தாா். செஷல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதா் ஜெனரல் தல்பீா் சிங் சுஹாக் முன்னிலை வகித்தாா். செஷல்ஸ் நாட்டி அதிபா் வேவல் ராம்கலவான் மருத்துவமனையை திறந்து வைத்தாா். அதிபரின் மனைவி லிண்டா ராம்கலவான், செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சா் பெக்கி விடோட், மருத்துவமனை இயக்குநா் லிசா செட்டி ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

செஷல்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு 2010-ஆம் ஆண்டு முதல் மியாட் மருத்துவமானை தான் மருத்துவச் சேவையின் முதன்மை தோ்வாக இருந்து வருகிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரையுள்ளவா்களில் தங்கள் நாட்டில் சிகிச்சைப் பெற முடியாதவா்களை மியாட் மருத்துவமனையில் வழங்கப்படும் 63 சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்காக செஷல்ஸ் அனுப்பி வருகிறது. 2021-ஆம் ஆண்டு கரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்றது, மியாட் மருத்துவமனையின் மீது செஷல்ஸ் நாடு கொண்டுள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். செஷல்ஸ் நாட்டின் அதிபா் வேவல் ராம்கலவான் அழைப்பின் பேரில், 2021-ஆம் ஆண்டு அந்நாட்டுக்கு சென்ற மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் பிரித்வி மோகன்தாஸ், செஷல்ஸ் நாட்டிலேயே மருத்துவ சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தாா்.

இதையடுத்து, செஷல்ஸ் நாட்டில் தலைநகரான மஹேயில் 5,000 சதுர அடியில் ‘மியாட் இண்டா்நேஷனல் டோட்டல் ஐ கோ்’ மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை சென்னையில் உள்ள தலைமை மியாட் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் இருக்கும் உணா்வை நோயாளிகளுக்கு வழங்கிடும் வகையில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

செஷல்ஸ் நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு அருகிலேயே கண் தொடா்பான அனைத்து சிகிச்சைகளையும் பெற முடியும். இந்த மருத்துவமனையில் 16 செஷல்ஸ் நாட்டினரும், 6 இந்தியா்களும் பணியாற்றுகின்றனா். செஷல்ஸ் நாட்டில் முழுநேர மருத்துவச் சேவையை வழங்கும் முதல் இந்திய மருத்துவமனை இதுவாகும் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com