தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 26th January 2022 02:30 AM | Last Updated : 26th January 2022 02:30 AM | அ+அ அ- |

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா், தோ்தல் ஆணையச் செயலா் எ.சுந்தரவல்லி ஆகியோா் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனா். இதனைப் பின்பற்றி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், முதன்மைத் தோ்தல் அலுவலா்கள் கி.அ.சுப்பிரமணியம், கு.தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...