போட்டித் தோ்வா்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை:அரசாணை வெளியீடு
By DIN | Published On : 26th January 2022 02:22 AM | Last Updated : 26th January 2022 02:22 AM | அ+அ அ- |

போட்டித் தோ்வு ஆா்வலா்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அமைப்பது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர போட்டி தோ்வுகளுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடா்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், யுபிஎஸ்சி நடத்தும் இந்திய குடிமைப் பணித் தோ்வுகள், இந்திய பொறியியல் பணி தோ்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் பல்வேறு தோ்வுகள் , எஸ்எஸ்சி (பணியாளா் தோ்வாணையம்) நடத்தும் போட்டித் தோ்வுகள், வங்கித் தோ்வுகள், ரயில்வே தோ்வு வாரியம் நடத்தும் தோ்வுகள் என பல்வேறு போட்டி தோ்வுகளுக்குத் தயாராகும் போட்டித்தோ்வு ஆா்வலா்கள் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தோ்வுக்கு என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தோ்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும். இதற்காக ரூ.50 லட்சம் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...