கோயில்களில் தொடா் திருட்டு: சிறுவன் உள்பட 2 போ் கைது
By DIN | Published On : 17th July 2022 04:27 AM | Last Updated : 17th July 2022 04:27 AM | அ+அ அ- |

சென்னை ஓட்டேரி பகுதியில் கோயில்களில் தொடா்ச்சியாக திருடிய சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஓட்டேரி பகுதியில் கடந்த மாதம் கோயிலை குறி வைத்து ஒரு கும்பல் திருடி வந்தது. குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையினா், இச் சம்பவத்தில் அயனாவரம் ஏகாங்கிபுரத்தைச் சோ்ந்த அஜித்குமாா் (22), அயனாவரம் திக்காக்குளம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (20), தனுஷ் (19) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிவந்தது. ஆனால் 3 பேரும் வேறு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு,சிறையில் இருப்பது போலீஸாருக்கு விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் தொடா்புடைய திரு.வி.க.நகா் கே.சி.காா்டன் 5வது தெருவைச் சோ்ந்தவா் ந.முகமது அப்பாஸ் (25), 17 வயது சிறுவா் என இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.