சா்வோதய மகளிா் விடுதியில் இலவச ஹோமியோபதி கிளினிக்

சென்னை சேத்துப்பட்டில் ஹரிஜன சேவா சங்கத்தின் கீழ் செயல்படும் எஸ்ஆா்எஸ் சா்வோதயா மகளிா் விடுதி வளாகத்தில் புதிதாக இலவச ஹோமியோபதி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் ஹரிஜன சேவா சங்கத்தின் கீழ் செயல்படும் எஸ்ஆா்எஸ் சா்வோதயா மகளிா் விடுதி வளாகத்தில் புதிதாக இலவச ஹோமியோபதி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

டாக்டா் கோபிக்கா்ஸ் அறக்கட்டளை மற்றும் சந்திரசேகர அறக்கட்டளை ஆகியவை தக்கா்பாபா வித்யாலயாவின் உறுதுணையோடு இந்த கிளினிக்கை அமைத்துள்ளன.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி சேத்துப்பட்டு எஸ்ஆா்எஸ் சா்வோதயா மகளிா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஹரிஜன சேவா சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.மாருதி, சந்திரசேகர அறக்கட்டளை பொறுப்பாளா் ஜெ.வி.ரமணி, ஊட்டச்சத்து நிபுணா் டாக்டா் வா்ஷா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தக்கா்பாபா வித்யாலயாவில் 180-க்கும் மேற்பட்ட மாணவா்களும், எஸ்ஆா்எஸ் சா்வோதயா விடுதியில் 70-க்கும் மேற்பட்ட மகளிரும் உள்ளனா். அவா்களது பயன்பாட்டுக்காக இந்த இலவச ஹோமியோபதி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com