கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு

கோயம்பேடி காய்கறி சந்தையில்  தக்காளியின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில்  தக்காளியின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததால் கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கத்தைவிட 20 முதல் 30  தக்காளி வண்டிகள் கூடுதலாக வந்ததால் தக்காளியின் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதிகப்படியான விளைச்சல், வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை குறைந்துள்ளது. மேலும் ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது என்பதால், காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த மே, ஜூன் மாதங்களில் மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com