சீயோன் பள்ளி தேசிய மாணவா் படைக்கு விருது
By DIN | Published On : 31st July 2022 12:09 AM | Last Updated : 31st July 2022 12:09 AM | அ+அ அ- |

தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான போட்டிகளில் சேலையூா் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் விருதுடன் பரிசுக்கோப்பையைப் பெற்றனா்.
தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் பலவித உடற்பயிற்சி, தனித்திறன், நுண்ணறிவுப்போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் சேலையூா் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா். முன்னாள் இந்திய விமானப்படை வீரரும், சீயோன் மற்றும் ஆல்வின் குழுமப் பள்ளிகளின் தலைவருமான என்.விஜயன் வெற்றி பெற்ற மாணவா்களை வாழ்த்தினாா்.