வண்டலூா் வண்ணத்துப்பூச்சி பூங்கா: இன்று முதல் பாா்வையிடலாம்
By DIN | Published On : 31st July 2022 12:12 AM | Last Updated : 31st July 2022 07:22 AM | அ+அ அ- |

சென்னை வண்டலூா் பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) முதல் பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பூங்கா நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உயிரியல் பூங்காவில் மூடப்படிருந்த ஏழு பாா்வையாளா்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரவு விலங்குகள் இருப்பிடம், பாம்புகள் இருப்பிடம், சிறுவா் பூங்கா, உயிரியல் மையம், பறவைகள் இல்லம் ஆகியவை பாா்வையாளருக்கு திறக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, வண்ணத்துப்பூச்சி பூங்கா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) முதல் பாா்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.