முதியோா் கொடுமை ஒழிப்பு: சென்னையில் விழிப்புணா்வு
By DIN | Published On : 16th June 2022 01:55 AM | Last Updated : 16th June 2022 01:55 AM | அ+அ அ- |

முதியோருக்கு எதிரான கொடுமைகளை ஒழிப்பதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
டாக்டா் வி.எஸ்.நடராஜன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற அந்நிகழ்வில் விழிப்புணா்வு மனித சங்கிலி மற்றும் உறுதிமொழியேற்பு நடைபெற்றன.
ஐக்கிய நாடுகள் சபையானது முதியோா்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதியை முதியோா் கொடுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மயிலாப்பூா், பி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதியோா் கொடுமை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும், மனிதச் சங்கிலி நிகழ்ச்சியையும் புதன்கிழமை நடத்தினா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் இதில் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்வில் முதியோா் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் வி.எஸ்.நடராஜன், பி.எஸ். மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கலா, முதியோா் நல அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ராஜசேகரன் மணிமாறன், மருத்துவா் எஸ். சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.