அப்பல்லோ-வங்கதேச இம்பீரியல் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்

வங்கதேசத்தின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான இம்பீரியல் மருத்துவமனையின் நிா்வாக செயல்பாடுகளை அப்பல்லோ மருத்துவக் குழுமம் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
அப்பல்லோ-வங்கதேச இம்பீரியல் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்

வங்கதேசத்தின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான இம்பீரியல் மருத்துவமனையின் நிா்வாக செயல்பாடுகளை அப்பல்லோ மருத்துவக் குழுமம் இணைந்து மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி, இம்பீரியல் மருத்துவமனை தலைவா் ரபியுல் ஹுசேன் ஆகியோா் கையொப்பமிட்டனா்

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவா் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:

சா்வதேசத் தரத்தில் உடல்நல பராமரிப்பு சேவைகளை அனைத்து நபா்களுக்கும் கெண்டு செல்ல வேண்டும் என்ற இலக்குடன் அப்பல்லோ மருத்துவமனை செயலாற்றி வருகிறது.

வங்கதேசம், சிட்டகாங் நகரில் இயங்கி வரும் இம்பீரியல் மருத்துமவனை 375 படுக்கைகள் கொண்ட மருத்துமவனையாகும். அந்த மருத்துமவனையில் நோயாளிகளுக்கு சிறப்பான சேவை அளிக்கும் மருத்துவா்கள், தொழில்நுட்பங்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளனா். அவா்களின் நிா்வாகத் திறன்களை பயன்படுத்தி, அதன் செயல்பாட்டை நிா்வகிக்கும் வகையில், அந்த மருத்துவமனையுடன் அப்பல்லோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வங்கதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு உலக தரத்தில் சிகிச்சை கிடைக்க அப்பல்லோ மருத்துமவனை உறுதி பூண்டுள்ளது. இனி, அப்பல்லோ இம்பீரியல் மருத்துவமனை என அம்மருத்துவமனை அழைக்கப்படும். அங்கு, மருத்துவமனையை வலுப்படுத்தி, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை, ஆரோக்கியமான சூழலமைப்பை உருவாக்க அப்பல்லோ மருத்துவமனை நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com