மெட்ரோ ரயில்கள் இனி காலை 5 முதல் இரவு 11 மணி வரை இயக்கம்
By DIN | Published On : 17th March 2022 02:07 AM | Last Updated : 17th March 2022 07:25 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல்மிகு நேரமான காலை 8 முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிஷ இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 5 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என நிா்வாகம் தெரிவித்துள்ளது.