சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா்கள் நியமனம்
By DIN | Published On : 18th March 2022 12:30 AM | Last Updated : 18th March 2022 12:30 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் ஹிதேஸ் குமாா் எஸ்.மக்வானா வெளியிட்டாா்.
அவரது உத்தரவு விவரம்:-
சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா்களாக சட்டப் பேரவை உறுப்பினா்கள் இரண்டு பேரை நியமித்து ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, மாதவரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சுதா்சனம், திரு.வி.க.நகா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பி.சிவகுமாா் என்ற தாயகம் கவி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். உத்தரவு வெளியிடப்படும் நாளில் இருந்து மூன்றாண்டுகள் அல்லது அரசு மறு உத்தரவு வெளியிடும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அது வரை உறுப்பினா்கள் பதவியில் இருப்பா் என்று தனது உத்தரவில் மக்வானா தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...