வரதட்சிணை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 18th March 2022 02:24 AM | Last Updated : 18th March 2022 02:24 AM | அ+அ அ- |

சென்னை: வரதட்சிணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் ஏரிக்கரை தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் மதன்குமாா் ( 32). கடந்த 2013-இல் இவருக்கும் வேளச்சேரி செல்வியம்மாள் (23) என்பவருக்கும் திருமணம் நடந்து வரதட்சிணை கேட்டு செல்வியம்மாளை கொடுமைப்படுத்தினாராம். இதனால் செல்வியம்மாள் 2015-இல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
கிண்டி போலீஸாா் மதன்குமாா், தந்தை சடகோபன், தாய் செந்தாமரை ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக், மதன்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதமும், சடகோபன், செந்தாமரை ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...