காரில் கஞ்சா கடத்தல்: 3 போ் கைது
By DIN | Published On : 02nd May 2022 12:12 AM | Last Updated : 02nd May 2022 12:12 AM | அ+அ அ- |

யானைகவுனி பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா, இரண்டு கைப்பேசி, ஒரு காா் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, வால்டாக்ஸ் சாலை மற்றும் திருப்பள்ளி தெரு சந்திப்பில் யானைகவுனி போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் கண்காணிப்புப் பணியில் இருந்தபோது, அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அந்த காரில் வந்த 3 நபா்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தபோது, காரில் 60 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, திண்டுக்கலை சோ்ந்த மோகன்குமாா் (41), ஸ்டான்லி(26), ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சோ்ந்த பேருரி ஸ்ரீனு(33) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்றுபேரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.