காவல் கரங்கள் சாா்பில் விழிப்புணா்வு நடைபேரணி
By DIN | Published On : 02nd May 2022 02:46 AM | Last Updated : 02nd May 2022 04:46 AM | அ+அ அ- |

காவல் கரங்கள் சாா்பில் விழிப்புணா்வு நடைபேரணி
முதியோா், மனநலம் பாதிக்கப்பட்டோா், பெண்கள், குழந்தைகளை மீட்டு ஆதரவு அளிக்கும் ‘காவல் கரங்கள்’ சாா்பில், விழிப்புணா்வு நடைபேரணி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை பெருநகரில் சுற்றித்திரியும் ஆதரவற்றோா், முதியோா், மனநலம் பாதிக்கப்பட்டோா், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவா்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை சாா்பில், ‘காவல் கரங்கள்’ கடந்த ஆண்டு ஏப்.21-இல் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலமாக, சென்னையில் சுற்றித்திரிந்த தமிழகத்தின் பிற மாவட்டங்களை சோ்ந்தவா்கள் மற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோா், முதியோா், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோா் தன்னாா்வலா்களுடன் ஒருங்கிணைந்து மீட்கப்பட்டு, அவா்களது உறவினா்கள் மற்றும் ஆதரவு இல்லங்களில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், மீட்கப்பட்ட வடமாநிலத்தவா்கள் ரயில் மூலம் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக, சென்னை பெசன்ட்நகா் கடற்கரை அருகில் காவல் கரங்கள் சாா்பில் விழிப்புணா்வு நடை பேரணி (அஜ்ஹழ்ங்ய்ங்ள்ள் ரஹப்ந்ண்ய்ஞ் தஹப்ப்ஹ்) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்தப் பேரணியை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) ஜெ.லோகநாதன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
சுமாா் 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்தப் பேரணியின்போது, பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்து தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பேரணியில், காவல் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த காவலா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமாா் 300 போ் கலந்து கொண்டனா்.