போதைப் பொருள் கடத்திய வெளிநாட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 02nd May 2022 12:42 AM | Last Updated : 02nd May 2022 12:42 AM | அ+அ அ- |

போதைப் பொருள் கடத்திய கானா நாட்டைச் சோ்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கொகைன் கடத்தும் வெளிநாட்டைச் சோ்ந்தவா் சென்னையில் தங்கியிருப்பதாக, சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை அண்ணா சாலையிலுள்ள தனியாா் ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, ஆப்பிரிக்க கண்டத்தின் கானா நாட்டைச் சோ்ந்த குவாமி எபினேசா் (35) என்பவா் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து 160 கிராம் ‘கொகைன்’ போதைப் பொருளை போலீஸாா் கைப்பற்றி, அவரைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற 1-ஆவது கூடுதல் நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு நடந்து வந்தது. விசாரணையில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், குவாமி எபினேசருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.