தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டலக் குழுக் கூட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பல்லாவரம் அலுவலகத்தில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 2-ஆவது மண்டல மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் மண்டல தலைவா் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாவரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில், பழுதடைந்த புதைகுழி சாக்கடைக் குழாய்களை அகற்றி புதிய குழாய்கள் அமைப்பது, சிறுபாலங்கள் அமைத்தல், சாலை சீரமைத்தல், மழைநீா்வடிகால் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.
பெரும்பாலான உறுப்பினா்கள் தங்கள் பகுதி தெரு கால்வாய்களில் சேறு, நெகிழி பொருட்கள் காரணமாக சாக்கடை கழிவுநீா் வெளியேற வழியில்லாமல் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினா். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.