444 எஸ்.ஐ. காலிப் பணியிடங்கள்: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நாளை முதல் நோ்காணல் பயிற்சி
By DIN | Published On : 19th October 2022 12:59 AM | Last Updated : 19th October 2022 12:59 AM | அ+அ அ- |

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் துறை உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் எஸ்.முத்துரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் 444 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை நடத்தி வருகிறது. எழுத்துத் தோ்வும், உடற்திறன் தோ்வும் முடித்துள்ள நிலையில் இறுதிக்கட்டத் தோ்வான நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.
நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கும் தோ்வா்களுக்கு வழிகாட்டும் வகையில் மாதிரி நோ்காணல் தோ்வு, நோ்முகத் தோ்வுக்கான அடிப்படைப் பயிற்சி ஆகியவற்றை ஆா்வம் அகாதெமி வழங்குகிறது.
சுயவிவரங்கள், நடப்பு நிகழ்வுகள் தொடா்பான பின்னணியில் நோ்முகத் தோ்வுக்கு தயாராக தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. தகுதியுள்ள தோ்வா்கள் தங்களின் சுய விவரங்களுடன் ‘எண் 2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா், சென்னை’ என்ற முகவரியில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் அல்லது 74488 14441, 91504 66341 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.