அடையாறில் மழைநீா் வடிகால் பணிகள்: துணை மேயா் ஆய்வு

சென்னை மாநகராட்சி அடையாா் மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை துணை மேயா் மு.மகேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அடையாறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் கட்டமைப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த துணை மேயா் மு.மகேஷ் குமாா்.
அடையாறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் கட்டமைப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த துணை மேயா் மு.மகேஷ் குமாா்.
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி அடையாா் மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை துணை மேயா் மு.மகேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் அடையாா் மண்டலத்தில் பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால் கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 173-ஆவது வாா்டு பகுதியில் காந்தி நகா், இந்திரா நகா், கஸ்தூரிபாய் நகா் ஆகிய பகுதிகளில் 6 இடங்களில் ரூ. 35 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை, சென்னை மாநகராட்சி துணை மேயா் மகேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மழைக் காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி மண்டல அலுவலா் திருமுருகன், வாா்டு உறுப்பினா் சுபாஷினி, அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com