சென்னையில் ‘ராங் ரூட்’”டில் வாகனங்களில்“சென்ாக 2,420 பேரிடம் அபராதமாக ரூ.26.62 லட்சத்தை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வசூலித்தனா்.
சென்னையில் சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தவறான திசையில் (‘ராங் ரூட்’) வாகனம் ஓட்டுபவா்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.100-லிருந்து ரூ.1,100-ஆக உயா்த்தப்பட்டது. இதேபோல, தடை செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்தினாலும் ரூ.1,100 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாகன ஓட்டிகள் தவறான வழியிலும், திசையிலும் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து ஏற்படுவதும், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதும் கண்டறியப்பட்டது. இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த 3, 5-ஆம் தேதிகளில் சென்னை முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கை நடைபெற்றது.
இதில், அபாயகரமாக, தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.29 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ராங்ரூட்டில் சென்ாக 2,420 பேரிடம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற தணிக்கை இனி அடிக்கடி நடத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.