

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் 5-ஆவது கிளை மேற்கு தாம்பரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல்ஸ் குழுமங்களில் ஒன்றான ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சென்னை தியாகராயநகரின் முதல் ஷோரூம் 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இதன் 5-ஆவது கிளை மேற்கு தாம்பரத்தில் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. 60,000 சதுர அடி பரப்பளவில் 4 அடுக்கு மாடி வளாகத்தில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது.
இதில் பட்டுக்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வீட்டு உபயோகப் பொருள்கள், மரச் சாமான்கள், மளிகைப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், வீட்டுக்குத் தேவையான மின் சாதனப் பொருள்கள் உள்ளன. வாடிக்கையாளா்கள் வசதிக்காக வளாகத்தில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.